தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. நாடு முழுக்க பல இடங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பெங்களூரில் தினமும் மழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளாவில் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு 45-ல் இருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிதுள்ளது.