`தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு` - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், குமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெற்கு கேரளா, தமிழக கடற்பகுதியில் அக்.31 வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், ‘இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு பகுதி மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், குமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி கொட்டாரம், விழுப்புரம் வல்லம் பகுதியில் தலா 7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தெற்கு கேரளா, தென் தமிழக கடற்பகுதியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.