திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட மருத்துவ நகர் பகுதியில் வசிக்கும் பிச்சாண்டியின் மகன் 21வயது பிரசாந்த், திருப்பத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரசாந்த் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் பொழுது, புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரைப்பாலத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் சாலை முழுவதும் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்திருந்தது. 


கழிவுநீர் தேங்கி நின்றதால், மாற்று வழியாக  அருகிலுள்ள ரயில்வே இருப்பு பாதையை கடக்க முயலும்போது, திருப்பத்தூர் வழியாக சேலம் நோக்கி சென்ற அதிவேக ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.


ஏற்கனவே திருப்பத்தூர் நகராட்சியின் மெத்தன போக்கால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் புதைக்குழி போல் இருந்ததில் நகராட்சியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் விழுந்து உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.


Also Read | திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்கு பழி வெட்டி கொலை!


இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்போது சாலையில் தேங்கி நிற்கும்  சாக்கடை கழிவு நீரை நகராட்சி நிர்வாகம்  அகற்றாததால், கல்லூரி மாணவர் ரயிலில் சிக்கி பலியாகியுள்ளார்.


இன்னும் எத்தனை பலிகளுக்கு பின்புதான் நகராட்சி நடவடிக்கை எடுக்குமோ தெரியவில்லை  என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.


விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடலை, திருப்பத்தூர் ரயில்வே காவல்துறை பிரசாந்தின் உடலை, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த விபத்து தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Also Read | கணவரை கொல்ல தீட்டிய சதி திட்டம் அம்பலமானதால் மனைவி தற்கொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR