திருத்தணி வைரல் வீடியோ விவகாரம்: இருவருக்கு பணியிட மாற்றம்
துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருத்தணி வைரல் வீடியோ விவகாரத்தில் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
தெரிவித்துள்ளார்.
திருத்தணி (Tiruthani) முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை 2 பேர் மறைக்கும் காட்சிகள் முகநூல் வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி கோவிலில் வெளியான CCTV காட்சிகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு கவனக்குறைவாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட 2 ஊழியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைக்கு விசாரணையில் இருப்பதால் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டு உள்ளார்கள் என்றும் விசாரணையில் குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே தவறு எங்கே நடந்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு (Sekar Babu) கூறினார்.
ALSO READ:காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது
நேற்று முதல் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ குறித்து கோவிலை சார்த்தவர்களிடம் கேட்ட பொழுது கந்தசஷ்டியின் போது நடைபெறும் பூஜையில் பூஜை செய்யக்கூடிய 6 அர்ச்சகர்கள் மட்டுமே அங்கு இருப்பார்கள் என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினர்.
அந்தப்பகுதியில் உள்ள CCTV காமிராவில் சுவாமி சிலை தெரியும் வண்ணம் உள்ளதால் அதை குறிப்பிட்ட பூஜை நடைபெறும் சமயத்தில் மறைத்திருப்பதாகவும் இது வழக்கமான ஒன்று என்றும் தெரிவித்தனர்.
இதை சிலர் சமூக வலைதளங்களில் (Social Media) பதிவிட்டு தவறான தகவல்கள் வைரலாக பகிரப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.
ALSO READ:கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை - தமிழக அரசு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR