சென்னை அரும்பாக்கத்தில் கோர விபத்து; ஆந்திர காதல் ஜோடி லாரியில் அடிபட்டு உயிரிழப்பு!
விபத்து தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஹரிராம் வயது 59 என்பவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்சர்லையா பிரசாத்(30). திருமுடிவாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் பாபிலோனா( வயது 23) ஜாபர்கான் பேட்டையில் தங்கி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து வந்தனர் . பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பின்னர் ஜாபர்கான் பேட்டை செல்வதற்காக ‘ u Turn’ போட்ட போது, அந்த வழியாக வந்த கும்மிப்டிபூண்டியில் இருந்து சைதாப்பேட்டைக்கு இரும்பு கம்பிகளை ஏற்று வந்த ட்ரெய்லர் லாரி மோதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது ட்ரெய்லர் லாரி இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தவாசியை சேர்ந்த டிரைவர் பொன்னனை (39) கைது செய்தனர்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
இதே போல் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் டாரஸ் லாரி மோதி, உறவினர் சுரேஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளர் நிர்மலா வயது 39 உயிரிழந்தார். இது தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஹரிராம் வயது 59 என்பவரை கைது செய்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ