நீட் தேர்வு குறித்து மக்களிடம் மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்காக வேதாரணியத்தில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் பழனிசாமி திமுக-வை சாடினார்
வியாழக்கிழமை நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், நீட் பிரச்சினையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டிய அதிமுக தலைவரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரின் போலித்தனத்தை தான் நன்கு அறிந்திருப்பதாக வாதிட்டார்.
2010 ஆம் ஆண்டு, காங்கிரஸ் (Congress) கட்சி நீட் தேர்வை அறிமுகப்படுத்திய போது, அதன் கூட்டணி கட்சியாக இருந்த திமுக, தன்னுடைய நிலையை காத்துக்கொள்ள இந்த முடிவுக்கு ஒத்துப்போனது. பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவியான வழக்கறிஞர் நளினி, நீட் தேர்வை தக்கவைக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
அதிமுக நீட் தேர்வை எதிர்த்ததுடன், 7.5 சதவீத ஒதுக்கீடுக்கு வழி வகுத்து, அரசுப் பள்ளிகளின் 435 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைவு பெறுவதற்கும் இலவசக் கல்வியைப் பெறுவதற்கும் வழிவகை செய்தது. அரசியல் ஆதாயங்களுக்காக பொய்களைச் சொல்லி திமுக தலைவர் மக்களை ஏமாற்ற முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ALSO READ: தாராபுரத்தை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்காக வேதாரணியத்தில் பிரச்சாரம் செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக்கும் சிக்கலைப் பற்றி குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி (Edappadi K Palaniswami), டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் சாகுபடி நிலங்களை இழப்பது குறித்து அச்சத்தை எழுப்பியதை அடுத்து, முழு டெல்டா பகுதியையும் ஒரு பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்து, திமுக தொடங்கிய திட்டத்தை அதிமுக அரசு முறியடித்ததாக பழனிசாமி கூறினார். விவசாய கடன்கள் மற்றும் நகைக் கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ததன் மூலம் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
"அதிமுகவில், ஒரு விவசாயி முதலமைச்சராக முடியும். ஆனால், திமுக (DMK) ஒரு கார்ப்ப்பரேட்டாக, அதாவது ஒரு நிறுவனமாக நடக்கிறது. இதில் திரு. ஸ்டாலின் சேர்மனாக அதாவது தலைவராக உள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் தயானிதி மாரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர். திமுக ஆட்சியில் ஒரு விவசாயி முதலமைச்சராக முடியுமா? " என்று பழனிசாமி கேள்வி எழுப்பினார். திமுக பெருமைப்பட்டுக்கொள்ள இதுவரை எந்த சாதனையையும் செய்யவில்லை என்று பழனிசாமி மேலு தெரிவித்தார்.
ALSO READ: பாஜகவின் வியூகம்; பிரச்சாரத்திற்காக தமிழகம் நோக்கி படை எடுக்கும் நட்சத்திர தலைவர்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR