பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஞாயிறன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.


அக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.