விவசாயிகள் பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கும் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மு. க. ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது:


வங்கிக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது.


இந்திய பிரதமராக மன்மோகன்சிங் இருந்த போது, வி. பி. சிங் பிரதமராக இருந்த போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தார்கள்.


மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்னைகளில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டத்தை மிகப்பெரியளவில் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.