தமிழக பட்ஜெட் 2020: எவ்வளவு நிதி ஒதுக்கீடு! முழு விவரம் உள்ளே!!
2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
11:44 14-02-2020
பிரதமர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் 112876 தனி வீடுகள் அமைக்கப்படும். அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு. சேலத்தில் புதிதாக இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சேலத்தில் புத்தராகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் சிப்காட் கொண்டு வரப்படும்.
11:42 14-02-2020
தமிழக மீனவர்களின் விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவி பொருத்தப்படும்.
11:39 14-02-2020
உண்வு மானிய திட்டங்களுக்காக ரூ.,6500 கோடி ஒதுக்கீடு. சமையல் எண்ணெய் மானிய விலையிலேயே வழங்கப்படும்.
11:35 14-02-2020
கால்நடைத்துறைக்கு ரூ., 199 கோடி ஒதுக்கீடு. தேனீ, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அமைக்க உத்தேசம்.
11:30 14-02-2020
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்.
11:29 14-02-2020
906 குளங்கள், 183 அணைக்கட்டுகள் சீரமைத்தல், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ., 649 கோடி ஒதுக்கீடு.
11:27 14-02-2020
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல்.
11:26 14-02-2020
விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக உழவர் - அலுவலர் தொடர் திட்டம் அறிமுகம். உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ., 200 கோடி ஒதுக்கீடு.
11:24 14-02-2020
நடப்பாண்டில் 10276 சீருடை பணியாளர்கள் புதிதாக பணி அமர்த்தப்படுவார்கள். விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்வு.
11:21 14-02-2020
கிழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைக்க ரூ., 12 கோடி ஒதுக்கீடு.
11:19 14-02-2020
வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு- ஓபிஎஸ்
11:18 14-02-2020
* 2018 - 2019 ஆம் நிதியாண்டில், தமிழகத்தில் பொருளாதார வரளர்ச்சி 8.17%.
* 2019-2020 ஆம் ஆண்டில், தமிழகத்தில் பொருளாதார வரளர்ச்சி 7.27%.
11:16 14-02-2020
தமிழகத்தின் மொத்தம் வருவாய் ரூ., 219375 கோடி. தமிழத்தின் மொத்த செலவு ரூ., 241601. தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ., 22225 கோடி.
11:13 14-02-2020
இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த, பணி மேற்கொள்ள ரூ., 700 கோடி ஒதுக்கீடு. பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரைக்க ரூ., 5439.76 கோடி ஒதுக்கீடு.
11:10 14-02-2020
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ., 500 கோடி ஒதுக்கீடு. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் - முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும் .
11:07 14-02-2020
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ., 667 கோடி ஒதுக்கீடு. இளைஞர் நலனுக்காக ரூ., 218 கோடி ஒதுக்கீடு.
11:05 14-02-2020
முத்திரை தாள் வரி 1 % இருந்து 0.25 % ஆகா குறைப்பு. முறைந்தப்பட்சமாக ரூ., 5000 மிகாமல் வசூலிக்கப்படும்.
11:02 14-02-2020
ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக ரூ., 4109 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ., 2018 கோடி ஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ., 1064 கோடி ஒதுக்கீடு.
10:59 14-02-2020
மதிய உணவு திட்டத்திற்கு ரூ., 5935 கோடி ஒதுக்கீடு
10:58 14-02-2020
தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்.
10:57 14-02-2020
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ., 153 கோடி ஒதுக்கீடு. இது சமய அருநிலையத்துறைக்கு ரூ., 281 கோடி ஒதுக்கீடு.
10:56 14-02-2020
ஜவுளித்துறைக்கு ரூ., 1224 கோடி ஒதுக்கீடு. மகளிர் னால திட்டங்களுக்கு ரூ., 78796 கோடி ஒதுக்கீடு.
0:54 14-02-2020
சுகாதாரத்துறைக்கு ரூ., 15863 கோடி ஒதுக்கீடு. தொழில்துறைக்கு ரூ., 2500 கோடி ஒதுக்கீடு.
10:52 14-02-2020
புதிதாக 11 மருத்துவ கல்லுகளை நிறுவுவதற்கு ரூ., 1200 கோடி ஒதுக்கீடு. கடலூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
10:51 14-02-2020
சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ., 12301 கோடி ஒதுக்கீடு. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ., 15850 கோடி ஒதுக்கீடு. அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேரியாக்கள் பொருத்தப்படும்.
10:47 14-02-2020
பள்ளிகளில் மடிக்கணினி வழக்கும் திட்டத்திற்கு ரூ., 966 கோடி ஒதுக்கீடு. உயர்கல்வித்துறைக்கு ரூ., 5052 கோடி ஒதுக்கீடு.
10:46 14-02-2020
போக்குவரத்து துறைக்கு ரூ., 2716 நிதி ஒதுக்கீடு. எரிசக்தி துறைக்கு ரூ., 20115 கோடி ஒதுக்கீடு.
10:45 14-02-2020
2020-21 ஆம் ஆண்டிற்கான நிகர கடன் வரம்பு ரூ., 627577.80 கோடி என கணிப்பு.
10:44 14-02-2020
2022-23 ஆம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கசன் 21.98 சதவீதமாக இருக்கும்.
10:42 14-02-2020
1364 நீர்பாசன பணிகளுக்காக ரூ.,500 கோடி ஒதுக்கீடு. நீர்பாசன திட்டங்களுக்காக ரூ., 6991 கோடி ஒதுக்கீடு.
10:40 14-02-2020
வேளாண்துறைக்கு ரூ.,11894 கோடி ஒதுக்கீடு. பயிர்க்கடன் ரூ.,11000 கோடி வழங்க்கப்படம்.
10:39 14-02-2020
போக்குவரத்து மானியன்களுக்காக ரூ.,110 கோடி ஒதுக்கீடு.
10:39 14-02-2020
உள்ளாட்சிகளுக்கு ரூ., 6754 கோடி ஒதுக்கீடு.
10:38 14-02-2020
பிரதான் மந்திரி வீடு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.
10:37 14-02-2020
முதல்வர் மாசுமை வீடு திட்டம் - வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவு ரூ., 2.10 லட்சமாக உயர்த்தப்படும்.
10:36 14-02-2020
கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ., 75 கோடி ஒதுக்கீடு.
10:33 14-02-2020
வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
10:32 14-02-2020
மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கீழ் தமிழகத்தின் 179 திட்டங்கள் சேர்ப்பு
10:31 14-02-2020
நீதி நிர்வாகத்திற்காக ரூ.,1403 கோடி ஒதுக்கீடு.
10:29 14-02-2020
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
10:28 14-02-2020
சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.,1403 கோடி ஒதுக்கீடு.
10:26 14-02-2020
சிறைச்சாலைகளுக்கு ரூ., 392 கோடி ஒதுக்கீடு.
10:25 14-02-2020
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க ரூ., 100 கோடி ஒதுக்கீடு.
10:23 14-02-2020
தீயணைப்பு துறைக்கு ரூ.,405 கோடி ஒதுக்கீடு.
10:22 14-02-2020
பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ., 1360 கோடி ஒதுக்கீடு.
10:21 14-02-2020
சமூக பாதுகாப்பு ஓய்வூதீய திட்டங்களுக்கு ரூ., 4315 கோடி ஒதுக்கீடு.
10:19 14-02-2020
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ ., 550 கோடி ஒதுக்கீடு.
10:17 14-02-2020
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த தனிச்சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற தமிழக அரசு முடிவு
10:10 14-02-2020
2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு
10:10 14-02-2020
உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக பட்ஜெட்
2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.
அதேசமயம் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் புதிய சலுகைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.