மேகதாது, ஸ்டெர்லைட் குறித்து ஆலோசனை; கூடுகிறது TN அமைச்சரவை
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் மேகதாது ஆணை குறித்து முக்கிய முடிவு குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது....
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் மேகதாது ஆணை குறித்து முக்கிய முடிவு குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது....
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (டிசம்பர் 24) மதியம் 12 மணிக்கு சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதேபோல் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.