மாரியப்பன் தங்கவேலுக்கு 2 கோடி- ஜெ., அறிவிப்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
தமிழக அரசின் ஊக்கத்தால் பதக்கம் வெல்ல முடிந்தது, பதக்கம் வெல்ல ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி - மாரியப்பன் தங்கவேல்.
தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் செல்வி ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் 2கோடி வெகுமதி வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.