தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இன்று ஆளுநரை சந்திக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலையற்ற அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று அதற்கான தீர்வு உருவானது. சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதையடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கூறப்பட்ட நிலையில், நேற்று சட்டமன்றம் கூடியது.


காலை 11 மணியளவில் தொடங்கிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் தொடர்ந்து சபாநாயகர் மறுத்து வந்த நிலையில், பேரவை போர்க்களமானது. எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பழனிச்சாமி 122 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துபேரவை நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்குவார் எனத்தெரிகிறது.