தமிழகம் அமைதி பூங்காவாக திகழ காரணம் காவல்துறை -EPS..!
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ காவல்துறையினர்தான் காரணம் என முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்...!
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ காவல்துறையினர்தான் காரணம் என முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்...!
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழக காவல்துறை எல்லா காலங்களிலும் சட்ட ஒழுங்கை பாதுகாத்து வருவதாகவும், கடமையை தவிர மனிதநேயத்தையும் காவல்துறையினர் கடைப்பிடிப்பதாகவும் தெரிவித்தார். ராணுவத்துக்கு இணையாக காவல்துறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்தார் எனவும் தீய ஆதிக்கத்தில் இருந்து விலகி இருங்கள்; நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் எனவும் அறிவுறுத்தினார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அரசு காவல்துறையின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக கூறிய முதலமைச்சர், தற்போதைய அரசும் அத்திட்டங்களை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.