மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2017) தலைமைச் செயலகத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 17 பயிர்ச்சியளர்கள் ஆகியோருக்கு 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:


அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், 


மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற பாலமுருகன் தியாகராஜன் மற்றும் எஸ். அர்ச்சனா, நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற ஐஸ்வர்யா செல்வகுமார் மற்றும் நிவ்யா ராஜா, வாள்வீச்சுப் போட்டியில் பதக்கம் வென்ற எம்.ஜே. தினேஷ், 


டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை வென்ற பி. ஜானி தர்மா மற்றும் எம். தினேஷ்பாபு, டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கங்களை வென்ற கே. ஷாமினி மற்றும் எஸ். நரசிம்மாபிரியா, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற என். நிவேதா மற்றும் சந்தியா வின்பேட், கையுந்து பந்து போட்டியில் பதக்கங்களை வென்ற எஸ். பிரபாகரன், எ. சபரிராஜன், ஜி.ஆர். வைஷ்ணவ், வி. ஜான் கிறிஸ்டோபர், எஸ். கனகராஜ் மற்றும் எம். நவீன் ராஜா ஜேக்கப், கூடைப்பந்துப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஜஸ்வர்யா, வி. பவானி மற்றும் பவுலினா ஜோசப் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 79 இலட்சம் ரூபாய் மற்றும் அவர்களது பயிற்றுநர்கள் 17 பேருக்கு ஊக்கத் தொகையாக 11 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வழங்கினார்.


மேலும் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டுக்களில் மென்மேலும் சிறந்து விளங்கி மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் எனவும் தமிழக முதல்வர் வாழ்த்தினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து ஊக்கத் தொகைக்கானகாசோலையினை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும்அவர்களது பயிற்றுநர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களதுநன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.


இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர்
முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திருமதி ரீட்டா ஹரிஷ் தக்கர்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.