சென்னை: தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) பிரச்சாரம் செய்ய உள்ளார். இரண்டு தொகுதிகளிலும் மூன்று - மூன்று நாட்கள் என மொத்தம் ஆறு நாட்கள் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். ஆளும் கட்சி அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம் கைகொடுக்குமா? என்று அக்டோபர் 24 ஆம் தேதி தெரிந்துவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி (Nanguneri), விக்கிரவாண்டி (Vikravandi), தொகுதிகளுக்கு இந்த மாதம் (அக்டோபர்) இடைத்தேர்தல் (ByElections) நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே ஆளும் கட்சி அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam), எதிர்கட்சி திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) போன்றவை தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அமமுக (Amma Makkal Munnetra Kazhagam) மற்றும் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சிகள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டியாக இருக்கும், அதேபோல நாங்குநேரி தொகுதியில் அதிமுக - காங்கிரஸ் (Congress) இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது. 


தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த வருட இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத்தேர்தலில் தங்கள் பலத்தை நிருப்பிக்க திமுக (Dravida Munnetra Kazhagam) மற்றும் அதிமுக (All India Anna Dravida Munnetra Kazhagam) பல வியூகங்களை வகுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் முக்கிய தலைவர்களை களம் இறக்கி உள்ளது. ஏற்கனவே இரண்டு தொகுதிகளிலும் திமுக-அதிமுக கட்சி நிர்வாகிகள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த தொகுதியில் சா.ராஜநாராயணன் வேட்பாளராக களம் காண்கிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கு.கந்தசாமி போட்டியிடுகிறார்கள்.


இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான நாள் மற்றும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. 


அதாவது நாங்குநேரி தொகுதியில் வரும் அக்டோபர் 12, 13, 16 ஆம் தேதிகளிலும், விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 14, 15, 18 ஆம் தேதிகளிலும் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.