ஜல்லிக்கட்டு: இன்று மாலை முதல்வர் மதுரை பயணம்!!
மதுரையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொள்வார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் தமிழர்கள் மாபெரும் புரட்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசு விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டத்தை ஓப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
இதனையடுத்து தமிழக பொறுப்பு ஆளூநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை தமிழகத்திற்கு வருகை தந்து அவசர சட்டத்திற்கு ஓப்புதல் அளிப்பார் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசின் இந்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொள்வார் என்றும், மேலும் நாளை ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைபார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.