தமிழகத்தில் தலைவிரித்தாடும் டெங்கு..! விழுப்புரத்தில் 12 பேருக்கு நோய் பாதிப்பு..!
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்சியர் பழனி, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும், முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும் என விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 12 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். டெங்கு காய்ச்சில் இருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை அனைவரும் நலமாக உள்ளனர், சுகாதாரத்துறை பொறுத்தவரையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆன்மீகம் என்ற பெயரில் சாதி மற்றும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மணியன் கைது
டெங்கு பரவும் காலம்..!
மழைக்காலம் தொடங்கி விட்டதால், சாலைகள் மற்றும் வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும். இதில், கொசுக்கள் உற்பத்தியாகி நம்மை மட்டுமன்றி நம்மை சுற்றி இருப்பவர்களையும் நோய் பாதிப்பிற்கு உள்ளாக்கி விடும். தமிழகத்தை பொருத்த வரை அவ்வப்போது பெய்யும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்து விட்டன. அதனால், மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. டெங்கு கொசுக்களில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்வது எப்படி?
டெங்கு கொசுக்களிம் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள்:
கொசுக்கடிக்காமல் தவிர்க்க...
-கொசுக்கள் எளிதில் கடிக்கும் இடங்களான கை மற்றும் கால்களில் கொசு ரிப்பள்ளண்ட் மருந்துகளை தடவலாம். ஆனால், அதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்.
-கண்கள், வாய் பகுதிகளில் இதை எந்த காரணத்திற்கொண்டும் தடவ வேண்டாம். முகத்தில் இந்த மருந்தை உபயோகிக்கவே கூடாது.
-ஸ்ப்ரே வகை கொசு மருந்துகளை பயன்படுத்தும் போது அதை உங்கள் முகத்தில் அடித்துக்கொள்ள வேண்டாம்.
-ரிப்பள்ளண்ட் மருந்துகளை உபயோகிக்கும் முன் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவவும்.
-குழந்தைகளிடம் இவ்வகையான மருந்துகளை கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு பெற்றோர்கள்தான் மருந்து தடவி விட வேண்டும்.
மேலும் படிக்க | சனாதானத்தை ஏற்றுக்கொள்பவர்களை எதிர்க்கவில்லை: அமைச்சர் சேகர் பாபு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ