சென்னை: தமிழ் நாட்டில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.  அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரை களமாக மாறியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த 234 சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்குக்கான தேர்தல் பிரச்சாரம் (Election Campaign) வருகிற 4 ஆம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருப்பதால், தமிழக தேர்தல் ஆணையம் பல நடவடிக்களை எடுத்து வருகிறது. வாக்குபதிவு விழிப்புணர்வு, கொரோனா பாதுகாப்பு அம்சம், வாக்குபதிவு இயந்திரம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் (Tamil Nadu Election Commission) இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை என 3 நாட்களும், அதேபோல தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 2ம் தேதி ஒருநாளும் டாஸ்மாக் கடைகள் (Tasmac Shops) மூடப்படும். மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


ஏற்கனவே தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் ஆறாம் தேதி வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) நடைபெறவதால், தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் நடைபெறும் அன்று பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு


கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டத்தில் தேர்தல்கள் நடைபெறும் எனவும், அதே வேளையில், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும்.  


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் என ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் (Assembly Elections 2021) பதிவாகும் வாக்கு எண்ணிக்கை (Elections Results 2021) மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR