TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
April 6 Holiday in Tamil Nadu: தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் ஆறாம் தேதி வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) நடைபெறவதால், அன்று அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ALSO READ | TN election 2021: நடனப்புயல் பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வீடியோ வைரல்
கடந்த மாதம் பிப்ரவரி 26 தேதி தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து சட்டமன்றத் தேர்தல்களுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டத்தில் தேர்தல்கள் நடைபெறும் எனவும், அதே வேளையில், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தது.
ALSO READ | TN Election 2021: தபால் வாக்கு அளிப்பது எப்படி? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார்.
அனைத்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.
ALSO READ | பணம் இருந்தால் தான் வேட்பாளரா ... டிவிட்டரில் கொதிக்கும் காங்கிரஸ் MP ஜோதிமணி.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR