சென்னை: தமிழ்நாடு (TN) மின்சாரத் துறை அமைச்சர் (Electricity Minister) பி.தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சராவார் இவர். இதற்கு முன்னர் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருந்ததால், மத்திய அமைச்சர் ஆர்.கெ. சிங் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கெ. பழனிசாமி இடையிலான சந்திப்பில் திரு. தங்கமணி (Thangamani) நேற்று கலந்துகொள்ளவில்லை. அவருக்கு கொரோனா (Corona) தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், அவரது சோதனை முடிவுகள் நேர்மறையாக (Positive) வந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் எம்.எல்.ஏ-வும் மூத்த அஇஅதிமுக தலைவருமான பி.வளர்மதிக்கு திங்களன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


ALSO READ: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பி.வளர்மதிக்கு கொரோனா தொற்று...!!


திமுக-வின் கெ.எஸ். மஸ்தான், ஆர்.டி.அரசு, வசந்தம் கெ. கார்த்திகேயன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  கடந்த மாதம் அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


முன்னதாக, செவ்வாயன்று, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷனின் வலைதளம் முதல்வர் வளாகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் அமைச்சர் தங்கமணியும் கலந்துகொண்டார் என்பது குறிபிடத்தக்கது. தலைமைச் செயலர் கெ.ஷன்முகமும் அப்போது உடன் இருந்தார்.


ALSO READ: 2020 JULY 09: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு