ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி, அவரது படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நிரூபித்த பொழுது சட்டசபையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:- 


சட்டசபை நிகழ்வுகள் முழுவதும் அதிமுகவின் தொலைக்காட்சி மட்டும் படப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் வெட்டி ஒட்டப்பட்ட காட்சியாக தான் சட்டசபை நிகழ்வுகள் வெளிவந்துள்ளது. அங்கு எந்த வன்முறையும், தக்குதலும் ஏற்படவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார். ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி, அவரது படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.