#GajaCyclone : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்!
கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்!
கஜா புயலின் மையப்பகுதி நள்ளிரவு கரையை கடந்தது புயல் கரையைக் கடந்த போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசி பலத்த சேதத்தினை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்நிலையில் கஜா புயல் மீட்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்...
"கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மின்துறை, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புயல் சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கஜா புயலால் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 82,421 பேர் இதுவரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த மாவட்டங்களிலேயே அமைச்சர்கள் தங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சேதபகுதிகளில் முகாமிட்டு உள்ளனர்." என தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
"கஜா புயலால் இதுவரை பலியானர்களின் எண்ணிக்கை 20 என தகல்கள் தெரிவிக்கின்ற..."