சென்னை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலைத் (Corona Virus) தடுக்க நடைமுறைபடும் முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9ம் தேதி முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ சென்னையில்‌ கலந்தாலோசனைக்‌ கூட்டம்‌ ஒன்றை நடத்தினார். அந்தக்‌ கலந்தாலோசனைக்‌ கூட்டத்தின்‌ போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்‌ அடிப்படையில்‌ சில‌ தளர்வுகள்‌ அறிவிக்கப்பட்டுள்ளன.


மலர்கள்‌, காய்கறி ஆகியவற்றை விற்பனை செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதை‌ போன்று, பழ வியாபாரமும்‌ மேற்கொள்ளலாம்‌ என்று அறிவிக்கப்படுகிறது.


ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு


அனைத்துத்‌ தொழில்‌ நிறுவனங்களளும் தங்கள் ‌தொழிற்சாலைகளில்‌ பிற பராமரிப்புப்‌ பணிகளை மேற்கொள்ள ஒரு நாள்‌ மட்டும்‌ குறைந்த அளவிலான பணியாளர்களுடன்‌ மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.


இந்த ஊரடங்கு காலத்தில்‌ அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும்‌ தொழிற்சாலைகள்‌ இயங்குவதில்‌ ஏற்படும்‌  பிரச்சனைகளை தீர்க்க உதவும் வகையில், 24 மணிநேரமும்‌ செயல்படும்‌  ஒரு “சேவை மையம்‌” அமைக்கப்படும்‌. . இதற்கான தொலைபேசி எண்கள்‌ 76239-28262, 96291-22906, 96771-07722, 99943-39191, 99629- 93496, 99629-93497.


நிபந்தனைகளுடன் ஆங்கில மருந்துக்‌ கடைகள்‌ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைப் போல, அதே நிபந்தனைகளுடன்‌, நாட்டு மருந்துக்‌ கடைகளும்‌ இயங்கலாம்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உதவுவதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ALSO READ | முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்: மு.க.ஸ்டாலின்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR