தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது.


அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் அகவிலைப்படி 9%-ல் இருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டது. அந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 5% அதிகரிக்கப்பட்டு 17% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் தமிழக அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.