மருத்துவ படிப்பில் 85% இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. 


மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. 


இதனையடுத்து, இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அதில், மத்திய பாடத்திட்டத்தில் சமனற்ற நிலையை களையவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது எனவும், மேலும் 5% இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மேல்முறையீடு மனுவில் தமிழக அரசு கூறியிருந்தது.


இந்நிலையில், இன்று  விசாரணைக்கு வந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த தனி நீதிபதி தனது தள்ளுபடி செய்தார். அப்பொழுது நீதிபதிகள் கூறியது, இட ஒதுக்கீடு என்பது சமமற்ற நிலையை உருவாக்கும். தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காத வகையில் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் எடுக்க வேண்டு என ஐகோர்ட் நீதிபதிகள் கூறினார்கள்.