கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் அண்மையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியிலும் மாணவர்கள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | நரிக்குறவர் குடும்பத்தை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம்!


இதில், மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்காமல், 14 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர, மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 476 மாணவர்கள் மற்றும் சமையல் கலைஞர்களுக்கும் கொரோனா, ஒமிக்கிரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின் முடிவில் அவர்களுக்கு கொரோனா மற்றும் ஒமிக்கிரான் இல்லை என தெரியவந்ததுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. 


விடுதிக்கு வெளியே இருந்து வரும் மாணவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவதுடன், 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பிறகே அவர்களை நேரடி வகுப்புக்கு அனுமதிக்க வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR