மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும், அரசின் புதிய நிபந்தனைகளால் மேற்படிப்பில் சேர முடியாமல் உள்ளவர்கள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், 2019-20ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான விளக்கக் குறிப்பேட்டை வெளியிட்டது. அதில், மருத்துவ முதுநிலை படிப்புக்கு 40 லட்சம் ரூபாயும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கு  20 லட்சம் ரூபாயும் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் எனவும், இரு அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் முழுவிவரத்தையும், தகுதி இருந்தும் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் யாரும் உள்ளனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், மருத்துவ மேற்படிப்பில் தற்போதுள்ள காலியிடங்கள் குறி்த்த விவரத்தையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.