சிறுதொழில் முனைவோருக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி ஏற்பாடு!
தமிழக அரசு சார்பில் `அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights)) மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல் (Lean Manufacturing) குறித்து ஒரு நாள் பயிற்சி` ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
தமிழக அரசு சார்பில் "அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights)) மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல் (Lean Manufacturing) குறித்து ஒரு நாள் பயிற்சி" ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில் தமிழக இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in) (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு 2013-2014 ஆம் ஆண்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டமான புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 3891 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் பிரதமரின் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) ஆகியவற்றின் வாயிலாகவும் பல்லாயிரம் தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தொழில்முனைவோர்களுக்காக, "அறிவுசார் சொத்துரிமைகள் (காப்புரிமை, வணிகப்பெயருரிமை, பதிப்புரிமை மற்றும் வடிவமைப்புரிமை) (Intellectual Property Rights- Patent, Trademark, Copy Right and Design) மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல் (Lean Manufacturing) குறித்து ஓரு நாள் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 31.10.2018 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032 என்ற விலாசத்தில் நடைபெற உள்ளதால், தொழில் செய்து வரும் தொழில்முனைவோர்கள், வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பயிற்சியில் உலகளாவிய போட்டி, அதிகரித்து வரும் உற்பத்தி செலவினங்கள், குறைந்து வரும் விலையும் இலாபமும் சமாளித்து வெற்றி பெறும் சிக்கன உற்பத்தி நுட்பங்கள் குறித்த வழிகளை பற்றி விளக்கப்படும். மேலும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நேரிலோ அல்லது இணைதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு
மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ
தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
044-22252081 / 22252082
8668102600
www.editn.in