தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இன்று வெள்ள நிவாரண பணிகளை குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைச்சர்களும் ஒவ்வொரும் தங்கள் பகுதிக்கு நேரடியாக சென்று வெள்ள நிவாரண பணிகளை ஆராய வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது.


அதன் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகிறது.


இன்று சென்னையில் உள்ள கோவிலம்பாக்கத்தில், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளுக்கு சென்று தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டார்.