ரூ. 2,079 கோடி வெள்ள நிவாரணம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் டி.ஆர் பாலு கோரிக்கை
கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து, அதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால், பலவித பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. சுமார் ஒரு வார காலம் பெய்த கன மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகத்தில் சேதங்களும், பல வித இழப்புகளும் ஏற்பட்டன.
இது தொடர்பாக புதன்கிழமை (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) நேரில் சென்று சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர் பாலு, வெள்ள பாதிப்புகளை சீரமைக்க, ரூ. 2,079 கோடி நிவாரணம் அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து, அதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை, கன்ன்யாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து தினமும் சென்று பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இது தவிர, தமிழகத்தில் பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள், நிதி உதவி ஆகியவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது
இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள எம்.பி. டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணமாக ரூ. 2,079 கோடியை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வெள்ள நிவாரண நிதியில் உடனடியாக ரூ. 550 கோடியை விடுவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ள பாதிப்பு குறித்து டி.ஆர் பாலு மத்திய அரசிடம் எடுத்துக்கூறிய முக்கிய அம்சங்கள்:
- வடகிழக்கு பருவமழை (Rain) காரணமாக தமிழகத்தில், 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 12 மாவட்டங்களில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது.
- வழக்கத்தை விட அதிகமாக, நவம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரை 49.6 சதவிகித மழை பெய்துள்ளது.
- தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
- பயிர் சேதம் அதிக அளவில் உள்ளது, குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படுள்ளன.
- டெல்டா மாவட்டங்களில் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் எற்பட்டுள்ளது. இதற்கு உடனடி நிவாரணம் தேவை.
ALSO READ: கோவை தற்கொலை: மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48 வலைதளங்கள் மீது POCSO பாய்ந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR