கனமழையால் பாதிப்படைந்த பள்ளி கட்டிடங்களை பொதுப்பணித்துறையின் உதவியுடன் உடனே இடித்து அகற்றுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் சேதமான கட்டிடங்கள், பள்ளி வளாகங்களில் இல்லாத நிலையை உறுதி செய்யுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.


இதனிடையே., நாளை தமிழகத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்., "தமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளத"


மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிடுகையில்., கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும்,  பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் இந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.