தமிழகத்தில் (Tamil Nadu)  நாளை, அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.  அதற்கு முன் கடந்த 9ம் தேதி தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது என பல்வேறு விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது.


மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 4.4% கீழ் நோக்கி சென்றுள்ளது. தமிழகத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது என பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.


ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ


 


தமிழகத்தின் வெள்ளை அறிக்கை (White Paper Report), திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்த்துகிறதோ என்பதோடு,  கட்டணயேற்றம் , விலையேற்றம் , வரியேற்றம் , போன்றவற்றை செயல்படுத்துவதற்கான அடித்தளமாக அமையுமோ என்று அனைத்து தரப்பு மக்களிடமும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை  இடையே மீண்டும் அரசு பஸ் சேவை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இந்த ஆட்சி மக்கள் சேவைக்காவே செயல்படும் எனவும், நிதி சுமை பற்றி கவலைப்படவில்லை எனவும் கூறியதோடு, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என உறுதி அளித்துள்ளார். 


மேலும், போக்குவரத்து துறை புதிய பொலிவுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 


ALSO READ | வெள்ளை அறிக்கை மட்டும் போதாது வெளிப்படையான சீர்திருத்தங்கள் தேவை: K.அண்ணாமலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR