தமிழகத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மையம்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
வங்க கடலின் வட மேற்கு பகுதியில் இன்று காலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னதாக, வங்கக்கடலில் உருவாகிய குலாப் புயல் காரணமாக, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், இப்போது, வங்ககடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்க கடலின் வட மேற்கு பகுதியில் இன்று காலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து, தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ALSO READ | தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
மேலும், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதன அருகில் உள்ள அந்தமான கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று தான் ஒரு புயல் கரையை கடந்திருக்கும் நிலையில் இது வலுவான புயலாக மாற வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படும். காற்றில் ஈரப்பதம் குறைந்திருக்கும் என வானிலை அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இந்தியாவில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டதை போல வரும் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை எதுவும் ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR