தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நாளை, வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர்  மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் நாளை மறுநாள் (23-09-21), டெல்டா மாவட்டங்களிலும் புதுகோட்டை, ஆரியலூர், பெரம்பலூர், கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்


வரும் 24ம் தேதி, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய கனமழை பெய்யும் எனவும்  ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வரும் 25ம் தேதி, கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஏனைய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச தட்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்த பட்ச தட்ப நிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் இருக்கும்.


ALSO READ | தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR