தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்கள் , புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வரும் 20ம் தேதி, அதாவது நாளை மறுநாள் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், வரும் 21ம் தேதி தமிழகம் மற்றும் புதுசேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வறிக்கை கூறுகிறது.


ALSO READ | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்


மேலும், வரும் 22ம் தேதி சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR