தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர்  ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது எனவும் வானிலை ஆய்வறிக்கை கூறுகிறது. அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பும் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20.10.2021,21.10.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


ALSO READ |  COVID-19 Update: இன்று 1,179 பேர் கொரோனாவால் பாதிப்பு; 16 பேர் உயிரிழப்பு


22.10.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் கடலோர  மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


23.10.2021 24,10.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,  நாமக்கல்,  வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை, அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
சோழவந்தான் (மதுரை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, ஏற்காடு (சேலம்), பெலாந்துறை (கடலூர்), தழுத்தலை (பெரம்பலூர்), தஞ்சை பாபநாசம் தலா 4, வத்திராயிருப்பு (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), விழுப்புரம், சிங்கோனா (கோவை) தலா 3, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), திண்டிவனம் (விழுப்புரம்), கூடலூர் பஜார் (நீலகிரி), வீரகனூர் (சேலம்), எடப்பாடி (சேலம்), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2, பேரையூர் (மதுரை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கடலூர் (கடலூர்), சென்னை விமான நிலையம், பாலக்கோடு (தர்மபுரி),  விருதாச்சலம் (கடலூர்), வீரபாண்டி (தேனி), கள்ளக்குறிச்சி, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார்  (கோவை) தலா 1.


ALSO READ | உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR