உள்ளாட்சித் தேர்தலில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4 ஆம் முறையாக நீட்டிப்பு செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. 


இதற்க்கு வார்டு வரையறை பணிகள் நடந்து வருவதாகவு, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறியது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால், உள்ளாட்சித்துறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று 4 ஆம் முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் இன்றைய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


மேலும், இந்த நீட்டிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.