10-ம் வகுப்பு தேர்வு: நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் விவரம்
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.2 சதவித மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 92.5 சதவிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
* தமிழ் மொழிப்பாடத்தில் மொத்தம் 69 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
* கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17,481 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேர் முழு மதிப்பெண் பெற்று உள்ளனர்.
1557 பள்ளிகள் 10 விழுக்காடு தேர்ச்சி பெற்று உள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் 91.59 சதவிகித தேர்ச்சி பெற்று உள்ளனர். 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,611 மாணவர்கள் பெற்று உள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் நடந்த ஆண்டை விட 0.8 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதில் மாணவர்கள்:- 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவியர் தேர்ச்சி:- 3.7 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்திலும் ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-
> www.tnresults.nic.in
> www.dge1.tn.nic.in
> www.dge2.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்பட்டது.