TNPSC Group 2 & 2A Results 2024 : இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2022 மே 21-ம் தேதி நடைபெற்றது. முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி நடைபெற்ற தேர்வில்  51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் மூலம் குரூப்-2 பதவிகளில் 161, 2ஏ பதவிகளில் 5,990 என மொத்தம் 6,151 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு..! எந்தெந்த தேதிகள் தெரியுமா?


டிசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கைகளால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் மாதம் முடிந்து புது வருடம் ஆரம்பித்தும் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி சார்பில் விளக்கம் அளித்தது.


மேலும், தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி, இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. இதேபோல் குரூப் 2ஏ தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய முடிவுக்காக காத்திருந்தவர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான எண்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. 


ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அடுத்ததாக தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போது குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், விரைவில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் திடீர் சோதனை: ஜாமீன் விஷயத்தில் செக் வைக்க திட்டம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ