டிஎன்பிஎஸ்சி-ல் பெரிய மாற்றம்: ஆனாலும் இதை நீக்கியே ஆகணும் - ராமதாஸ் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சியில் இனி நேர்முகத் தேர்வர்கள் விவரங்கள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்க்க இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி மாற்றம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 உள்ளிட்ட பணிகளுக்கு இருக்கும் நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக நீண்ட காலமாக புகார்கள் இருக்கின்றன. இதனை கட்டாயம் தடுக்க வேண்டும் என தசாப்தங்களாக தேர்வர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போட்டித் தேர்வர்களின் விவரம் இனி A,B,C,D என்றே குறிப்பிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் பெண்கள் உரிமைத் தொகைக்கு இனி விண்ணப்பிக்க முடியுமா?
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அதன் நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேர்முகத் தேர்வுகளுக்கு (Oral Test) அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை A,B,C,D முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் (Interview Boards) அனுமதிக்கப்படுவர். இப்புதிய நடைமுறைகளுடன் ஏற்கெனவே உள்ள Random shuffling முறையும் சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்புத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு
இந்த மாற்றத்துக்கும் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வு என்பதே இருக்ககூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, தகுதியும், திறமையும் கொண்ட பலரின் வாய்ப்புகளைப் பறித்து விடுகிறது. அனைவருக்கும் சமநீதியும், சமுக நீதியும் கிடைக்க நேர்முகத் தேர்வு பெருந்தடையாக உள்ளது. அந்தத் தடை விரைவாக நீக்கப்பட வேண்டும்.
ஆந்திராவில் நேர்முகத் தேர்வு இல்லை
ஆந்திராவில் முதல் தொகுதிபணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 2019-ம் ஆண்டுமுதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசுப் பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இங்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஒரே விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 113 பேர்! வசமாக சிக்கியது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ