இன்று தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- 


தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படும். முதல் கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.