முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரசு வீட்டை காலி செய்தார். வீனஸ் காலனியில் புது வீட்டில் குடியேறினார்.


முதல்-அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருந்தபோதும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கி தனது பணியை செய்து வந்தார். ஆனால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்யும்படி ஓ. பன்னீர்செல்வத்திற்கு பொதுப்பணித்துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து வேறு வீடு தேடி வந்தார் பன்னீர்செல்வம். இன்று தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து, வீனஸ் காலனியில் அமைத்துள்ள புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறியுள்ளார். போயஸ் கார்டன் பகுதிக்கு அருகாமையில் தான் வீனஸ் காலனி பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.