வ.உ சிதம்பரனாரின் 150வது பிறந்த  ஆண்டான இந்த ஆண்டில், 85 ஆவது நினைவு தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி பிறந்த இல்லத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தென்னாட்டு பண்பாட்டுக் மையம் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிகழ்ச்சியில்  தமிழக தொழில் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வ.உ. சி  திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.


தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு வரலாற்றுச் சுருக்கம் என்ற புத்தகத்தை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வஉசி பிரிட்டிஷ் பொருளாதார ஆதிக்கத்தைத் தகர்க்க மாபெரும் சக்தியாக இருந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டு உள்ளது என்று கூறினார். 


நிகழ்ச்சியில் பேசிய, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், வஉசி  நினைவு தினம் தியாகத்திருநாளாக அறிவித்த பெருமை இந்த அரசையே சாரும். நாட்டிலேயே முதன்முதலாக தொழிலாளர்களுக்காக ஒரு போராட்டம் என்று அவருடைய பெருமையை எடுத்துரைத்தார். அவருடைய எண்ணத்திற்கு நாம் தமிழர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


ALSO READ | கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது


நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வஉசி 100 ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினார். அவர் வழியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் 150வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆங்கிலேயரின் பொருளாதாரச் அடிச்சுவட்டை அடியோடு தகர்த்தெறிந்த வஉசி சுதேசி கப்பலை இயக்கினார். வ.உ.சிதம்பரனார் பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்த போதும் தன்னுடைய பொருளாதாரத்தை அவர் உயர்த்திக் கொள்ளவில்லை என்றார். 


நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய மிகப்பெரிய தலைவர் வஉசி தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாத அளவில் பொருளாதார நெருக்கடிக்கு சென்றபோது சென்னையில் ஒரு மளிகை கடை வைப்பதற்காக தந்தை பெரியார் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டார். 


எல்லோரும் சமம் என்ற சமூக நீதி சிந்தனையோடு செயல்பட்டவர் வஉசி என தந்தை பெரியார் குறிப்பிட்டதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். 


இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை ஆணையர் பிரகாஷ் தூத்துக்குடிமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள்  சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ALSO READ | Gravel Soil: கிராவல் மண் கடத்தல் விவகாரத்தில் OPS மீது வழக்கு பாயுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR