தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.