சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.64 ஆக விற்பனையாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சோலைமணியை அமெரிக்கா கொன்ற பின்னர் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  திங்கட்கிழமை (ஜனவரி 6) தொடர்ந்து உயர்த்தப்பட்டது. சோலைமானியின் மரணத்திற்குப் பிறகு மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகளில் பெருமளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தரவின் படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.58ஆகவும் உள்ளது. 


ஜனவரி 02, 2020 துவங்கி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 பைசா அதிகரித்துள்ளது, டீசல் விலை 55 பைசா அதிகரித்துள்ளது.


பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் ரூபாய்-அமெரிக்க டாலர் மாற்று விகிதத்தை சார்ந்துள்ளது, ஏனெனில் இந்தியா தனது கச்சா தேவைகளில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியா தனது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை 84 சதவீதம் சார்ந்துள்ளது, மேலும் எந்தவொரு உலகளாவிய விலைகளும் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.


நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளன. குறிப்பாக ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.