தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பிருந்துதான் இதன் விலை குறையத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில், தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுமுகம் இறங்குமுகமாய் உள்ளது. தக்காளி விலை குறைந்து விட்டது என்று நம்பி நாளை கடைக்கு சென்றால், அப்போது வேறு ஒரு விலையாக உள்ளது. இன்று இருக்கும் தக்காளி விலை நாளை இருப்பதில்லை. கிலோ ஒன்றிற்கு 30-40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, சில நாட்களுக்கு முன்பு வரை சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளியின் விலை தமிழக சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக தக்காளியின் விலை ஆங்காங்கே கணிசமாக குறைந்து வருகிறது. கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. இதில், அந்தந்த ரகங்களை பொருத்து தக்காளியின் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதாக கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் தெரிவித்தருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’சித்தியுடன் நெருக்கம்’ தட்டிகேட்ட அத்தை கொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு


இன்றைய விலை நிலவரம்:


இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கிலோ ஒன்றிற்கு 90 ரூபாயாக விற்கப்பட்டது. நேற்று விலை ஏதும் மாறாமல் அதே 90 ரூபாய்க்கே விற்க்கப்பட்டு வந்தது. முன்னர் இருந்ததை விட, தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதுதான் இந்த விலை மாற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், நவீன் தக்காளி எனும் ஒரு ரக தக்காளி மட்டும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, தக்காளியின் விலை 20 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி, 60 ரூபாய்க்கு மூன்றாம் ரக தக்காளி 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நவீன் தக்காளி, ஒரு கிலோவிற்கு 90 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. 


விலை உயர்வு-குறைவிற்கு காரணம்:


தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்தது காணப்பட்டது. இதற்கு காரணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதுதான் என சில ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பூச்சி பிரச்சனையும் காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து மழை பெய்ய தொடங்கியதால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு காய்கறிகளை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில்தான் தக்காளி அதிகம் பயிரிடப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மழை காரணமாக இது தடைப்பட்டு போனதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதால் தக்காளியின் விலை குறைந்து வருகிறது. 


வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு:


தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் மாதங்களில் ஒரு கிலோ வெங்காயம் 60-70 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று ஒரு தரவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை மாதங்களான செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதன் விலை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 


காய்கறி விலை நிலவரம்:


கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 


>பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 


>அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் ஒரு கிலோவிற்கு தலா 40  ரூபாயாக விற்கப்படுகிறது. 


>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 33 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 


>கேரட் ஒரு கிலோவுக்கு 60  ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதன் விலையில் பல நாட்களாக மாற்றம் இல்லை. 


>பச்சை குடைமிளகாய் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோவிற்கு 160 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ