Tomato Price In Tamilnadu: தக்காளி விலை என்பது தொடர்ந்து, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கும் வரலாற்றில் இல்லாத அளவில் விலை உயர்வை கண்டுள்ளது. பருவமழை, அதனால் ஏற்பட்ட குறைவான விளைச்சல், தொடர்ந்து சந்தைக்கு வரத்து குறைந்து அதன் விலை தற்போது எக்குத்தப்பாக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளியை பொறுத்தவரை கர்நாடகா பெரும் விளச்சலை பார்க்கின்றன. அங்கிருந்து தான் தக்காளி நாட்டின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. கர்நாடகா மட்டுமின்றி தெலங்கானா, ஆந்திரா என அதிக விளைச்சலை செய்யும் மாநிலங்களில் பருவமழை அதிகம் பெய்துள்ளது. இதனால், தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. 


அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த வாரம் சற்று குறைந்து, கடந்த நான்கு - ஐந்து நாள்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், மொத்த விலைக்கு நேற்று தக்காளி ரூ. 160 ஆகவும், சில்லறை விலையில் ரூ. 180 ஆகவும் இருந்தது. இந்நிலையில், ரூ. 20 ரூபாய் உயர்ந்து தக்காளி மொத்த விலையில் இன்று ரூ. 180 ஆகவும், சில்லறை விலையில் ரூ. 200 விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, கோயம்பேட்டில் உள்ள தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் கூறப்பட்டதாவது,"எப்போதும் 80 வண்டிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 22-23 வண்டிகளே வந்துள்ளன.  கர்நாடகாவில் இருந்து இங்கு வர வேண்டிய தக்காளிகள் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுவதால், இங்கு வரத்து குறைந்துள்ளது. மேலும், அங்கு மழையும் பெய்து உள்ளதால் விளைச்சலும் குறைந்துள்ளது. 


மேலும் படிக்க |  தக்காளியை நீண்டகாலம் அழுகாமல் வைத்திருக்கலாம்... இதோ எளிய 5 வழிகள்


இன்னும் 20 நாள்களுக்கு இந்த தக்காளி விலை உயர்வு நீடிக்கும். தமிழகத்தில் இருந்து தக்காளி விளைச்சல் வந்து வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும். தமிழ்நாட்டின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, உடுமலைபேட்டை ஆகிய இடங்களில் இருந்து தக்காளிகள் வரும்போது விலை குறையும். இதனால், வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பை கொடுக்கின்றன. மேலும், தமிழ்நாட்டு விவசாயிகளை விட வெளிமாநில விவசாயிகளுக்கு தான் அதிக நல்ல லாபம் கிடைக்கும். தமிழ்நாட்டில் இருந்து வரத்து வரும்போது விலை குறைந்து, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு லாபம் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது ஒருபுறம் இருக்க தென் மாவட்டமான திருநெல்வேலியில் தக்காளி விலை குறைந்துள்ளது. அதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை தக்காளி மொத்த விலையில் ரூ. 180 ஆகவும், சில்லறையில் ரூ. 200 ஆகவும் விற்கப்படுகிறது. இன்றைய நிலவரமாக சில்லறை விலை 50 ரூபாய் குறைந்து, ரூ. 150 ஆக விற்கப்படுகிறது. மொத்த விலையில் ரூ. 140 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன், திருநெல்வேலி ரூ. 120 வரை மட்டுமே விற்கபட்டு வந்தன. அந்த வகையில், நேற்று திடீரென தக்காளி ரூ. 200 வரை சென்றது. மீண்டும் தக்காளி விலை குறைந்துள்ளது. 


எனவே, தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அடுத்த 20 நாள்கள் வரை இது தொடரும் என்ற தகவல் அவர்களுக்கு கூடுதல் தலைவலியை உண்டாக்கியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வர இருக்கும் தக்காளியை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | தக்காளி திருட்டு... 400 கிலோ தக்காளியை காணோம் என விவசாயி போலீஸில் புகார்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ