வரும் 6-ம் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, வாகனம் ஓட்டும் போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் நடைமுறைக்கு ஒத்துவராது என நீதிபதி கூறி இருந்தார்.


இந்நிலையில்ம் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திப்பதில் என்ன சிரமம். எனவே நாளை முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் இது சம்பந்தமான அனைத்து வழக்குகளும் வரும் வெள்ளிகிழமையன்று விசாரித்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் நீதிபதிகள் கூறினார்கள்.