தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்த மேலக்கடையநல்லூர் பண்பொழி சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் இந்த ஏ.டி.எம். இயந்திரம் உள்ளதால் மற்ற வங்கி ஏ.டி.எம் மையத்தை விட இந்த இயந்திரத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் நேற்று மேலக்ககடையநல்லூர் தென்வடல் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் ரூ.9 ஆயிரம் எடுத்தார். அப்போது ஏ.டி.எம்-ல் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். எட்டு 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் வந்துள்ளன. மேலும் சில ரூபாய் நோட்டுகள் கரையான் அரித்த நிலையில் வந்ததால் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் மேலாளரை தொடர்புகொண்டு மாரியம்மாள் புகார் அளித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் தங்கள் வங்கிக்கு சொந்தமானது இல்லை என மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Corona Virus vs Moderna: 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு மாடர்னாவின் தடுப்பூசி பலனளிக்கும்



இதனால் செய்வதறியாமல் திகைத்த அவர், தனியார் வங்கி ஊழியரை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக திருநெல்வேலி மணடல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாரியம்மாளைபோல் மேலும் சிலருக்கும் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்ததாக பலரும் புகார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். 



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாரியம்மாள் பேசுகையில், ''எனது கணவர் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மகளின் பள்ளி சீருடைகள் வாங்க அனுப்பிய பணத்தை அவசர தேவைக்காக எடுத்த போது அவை கிழிந்த நோட்டுகளாக வந்தன. அவசர தேவைக்காகதான் பொதுமக்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கின்றனர். ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற தனியார் ஏடிஎம்மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க | War For Taiwan: தைவானுக்காக போரும் நடக்கலாம்: அமெரிக்காவுக்கு சீனாவின் சூசக எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR