சென்னை: இன்று (நவம்பர் 11) மாலைக்குள் புதுச்சேரிக்கு வடக்கே காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சென்னையில் (Chennai) நேற்று இரவு முதலே தொடர்ந்து 12 மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக சுரங்கபாதைகளில் நீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. 


அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட (Greater Chennai Corporation) பகுதிகளில் 16 சுரங்கப்பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10.11.2021 இரவு முதல் தற்பொது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த சுரங்கபாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.


தற்போது மழை நீர் தேக்கத்தின் (Water Stagnation) காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டு 5ல் உள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 46 ல் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் வார்டு 55 ல் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை, இராயபுரம் மண்டலம் வார்டு 60 ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136 ல் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 140 ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகர் வார்டு 136 ல் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. 


ALSO READ |  LIVE TN Rain Updates: இன்று கரையைக் கடக்கிறது - விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை


பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளின் வழியே
செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பருவ மழையை (Rain) முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் 
044-25619204, 04425619206, 044-25619207,044-25619208, 044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல்
போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம். 


இவ்வாறு தனது அறிவிப்பில் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 


ALSO READ | சென்னை பிரதான சாலையில் தொடர்ந்து ஏற்படும் ராட்சத பள்ளங்கள்: பொதுமக்கள் அச்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR